தேவகோட்டையில் தொடர் கொள்ளை-கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
தேவகோட்டை: தேவக்கோட்டையில் நகை கடை உட்பட பல இடங்களில், தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்மக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவங்கங்கை மாவட்டம், தேவக்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. தேவக்கோட்டை பஸ் நிலையம் அருகே நகை கடை வைத்திருப்பவர் பழனிச்சாமி. நேற்று காலையில் வழக்கம் போல ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கடையிலிருந்த 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
அதே பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி பட்டறை வைத்துள்ளவர் கண்ணன். அவரது கடையில் இருந்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருந்தது. மேற்கண்ட சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களை கொண்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தேவக்கோட்டை சந்தையின் மொத்த வியாபாரி விக்கிரபாண்டி. நேற்றுமுன்தினம் இரவு வியாபாரம் முடித்து வீடு திரும்பினார். வழியில் காந்தி சாலையில் சென்ற போது, மோட்டர் சைக்கிளில் வந்த 2 மர்மநபர், அவரிடம் இருந்த 1 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.
மேலும், தானாவயல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும், சரஸ்வதி வாசக சாலைத் தெருவை சேர்ந்த சத்யாவிடம் நகை மற்றும் பணத்தையும் மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
தேவக்கோட்டை பகுதியி்ல் கடந்த 2 நாட்களில் ஆங்காங்கே நடத்த கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications