சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் கோஷ்டி மோதல்- இரு கோஷ்டியினர் தள்ளுமுள்ளால் பதட்டம்
சென்னை: வெள்ளையனே வெளியேறு தினமான இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு கோஷ்டிக்கும், ஜி.ஏ.வடிவேலு தலைமையிலான கோஷ்டியினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இரு கோஷ்டியினரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் தங்கபாலு தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், இதுதொடர்பாக மேலிடத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் அவர் அடுத்தடுத்து பிற கோஷ்டிகளின் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார்.
முதலில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரை நீக்கினார். இந்த நிலையில் சமீபத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜி.ஏ.வடிவேலு, இதாயத்துல்லா உள்ளிட்ட சிலரை நீக்கினார்.
இதனால் அவர்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். வடிவேலு நீக்கத்திற்கு ஈவிகேஎஸ் இளங்கோவனும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான இன்று சத்தியமூர்த்தி பவனில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தங்கபாலு அறிவித்திருந்தார். அதேசமயம், சோனியா காந்தி உடல் நலமடையக் கோரி இன்று பிரார்த்தனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் என வடிவேலு அணியினரும் அறிவித்திருந்தனர்.
இதனால் இரு தரப்பினரும் முட்டி மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து காலை முதல் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இரு தரப்பினரும் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் குவிந்தனர். இரு தரப்பினரும் ஒன்றாக குவிந்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஆவேசமாக பேசியபடியும், ஒருவரையொருவர் திட்டியபடியும் மோதிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
இரு தரப்பினரையும் அங்கு கூடியிருந்தவர்கள் விலக்கி விட்டு வருகின்றனர். தொடர்ந்து பதட்ட நிலை நீடிப்பதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாத வகையில் போலீஸாரும் ஆயத்தமாக உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications