நில அபகரிப்பு: ஒரே நாளில் 10 பேர் சரண், 3 பேர் ஜாமீன் மனு தாக்கல், 3 பேர் கைது
சேலம்: நில அபகரிப்பு வழக்குகளில் ஒரே நாளில் 10 பேர் சரண் அடைந்துள்ளனர். 3 முக்கிய கட்சி நிர்வாகிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நில அபகரிப்பு, நில மோசடி தொடர்பான வழக்குகள் குறித்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 3 முக்கிய நிர்வாகிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்குகளில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்குகளில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி சித்தானந்தன், காங்கிரஸ் நிர்வாகி உலக நம்பி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் அவர்களை சரண் அடையுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் நேற்று சேலம் 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஜி. சரத்ராஜ் முன்பு சரண் அடைந்தனர். இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இரு நபர் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் தினமும் காலை குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போன்று பிரீமியர் மில்ஸ் நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த ஏ.ஆர். ஆர். சீனிவாசன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் ரவிச்சந்திரன், ராமநாதன், மகள்கள் சுமித்ரா தேவி, கீதா, அசோக் துரைசாமி, திமுக நிர்வாகி அழகாபுரம் முரளி ஆகிய 8 பேரும் நேற்று சேலம் 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஜி. சரத்ராஜ் முன்பு சரண் அடைந்தனர். அவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இரு நபர் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்களும் தினமும் காலை குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஓமலூர் கோட்டமேட்டுப்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் வரதராஜன் பாமக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி மீது நில மோசடி புகார் கொடுத்தார். இதையடுத்து கார்த்தி தலைமறைவாகியுள்ளார். அவர் முன் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை(11-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகியுள்ள தாசநாயக்கன்பட்டி நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய அவரது உதவியாளர் கௌசிக பூபதி, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் குமார் ஆகியேர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். கௌசிக பூபதி மனு நாளையும், சுரேஷ்குமாரின் மனு நாளை மறுநாளும் விசாரணைக்கு வருகிறது.
மதிமுக நிர்வாகி கண்ணையன் கொடுத்த நில அபகரி்ப்பு புகாரின்பேரில் திருச்சி பொன்மலைப் பகுதி திமுக செயலாளர் தர்மராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆயக்குடியில் உள்ள அரசு நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகியும்,சிவகிரிப்பட்டி ஊராட்சித் தலைவருமான மாரியப்பன், அவரது மனைவி முருகேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications