For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத்தமிழர் விவகாரம்: செப்டம்பர் 7ல் நாடாளுமன்றம் முன்பு சிபிஎம் போராட்டம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கையை இந்திய அரசு வலியுறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் 7-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தவிருக்கின்றது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அங்குள்ள தமிழர்கள் நலன் கருதி எந்தவித அரசியல் தீர்வும் காணப்படவில்லை. இது மட்டுமின்றி இறுதி கட்டப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல் குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. போரால் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பும் இல்லை.

இதனால் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண் இலங்கையை இந்திய அரசு வலியுறுத்தக் கோரி வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
CPI(M) has decided to protest in front of the parliament on september 7 insisting India to pressurize Sri Lanka to take actions for the welfare of the Tamils there. The party has told that there is no safety for the lives of the displaced Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X