மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து மீது பண மோசடி புகார்
மதுரை: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து. இவரது தங்கை தங்கம். இவர் வங்கி கடன் பெற்று இண்டிகா கார் ஒன்று வாங்கியுள்ளார். புதூரை சேர்ந்த (108 இலவச ஆம்புலன்ஸ்) டிரைவர் சரவணக்குமார் என்பவரிடம் 1,65,000 ரூபாய் என விலை பேசி, 60 ஆயிரம் ரூபாயை இசக்கிமுத்துவிடம் கொடுத்தார்.
பாக்கியுள்ள 1,05,000 ரூபாயை வங்கியில் செலுத்துமாறு இசக்கிமுத்து கூறியுள்ளார். ஆனால், வங்கியில் விசாரித்த போது, காருக்கு 1,45,000 ரூபாய் பாக்கி உள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து இசக்கிமுத்துவிடம் சரவணக்குமாரின் நண்பர் இருளாண்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, அவரது மகன் குட்டிமணி, உதவியாளர்கள் ரவி, வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து சரவணக்குமாரை தாக்க முயன்றனர்.
இது குறித்து சரவணகுமார் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications