அதிக எடை கொண்ட குழந்தைகள் எண்ணிக்கை சென்னையில் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் பள்ளிக் குழந்தைகளில் அதிக பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல், பள்ளிக் குழந்தைகளிடைய நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.
சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையம் சார்ப்பில் பள்ளி குழந்தைகளின் உடல் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம், 23 அரசு மற்றும் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில் தெரியவந்த முடிவுகள் பின்வருமாறு:
இதில், சென்னை குழந்தைகளிடையே அதிக உடல் எடைக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிந்தது. மொத்த கணக்கெடுப்பில், 34 சதவீத மாணவ, மாணவியர் அதிக எடையுடன் இருந்தனர். 7 சதவீத மாணவ, மாணவியரின் ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகமாக இருந்தது.
எதிர்காலத்தில் உடல்நலத்தை கண்டுகொள்ளாத பட்சத்தில், சக்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஆய்வில் கலந்து கொண்ட அதிக எடை கொண்ட பலருக்கும் உடலில் ஆங்காங்கே தேவையற்ற சதைமடிப்புகள் இருந்தது.
இதுவும் பிற்காலத்தில் நீரிழிவு நோய் வழிவகுக்கும். அதிக உடல் எடையால், பருவமடைந்த மாணவியர் இடையே மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் ஏற்பட்டு நீரிழிவு நோய் உண்டாகலாம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications