செங்கோட்டையில் நடந்த தாக்குதல்- லஷ்கர் தீவிரவாதிக்கு மரண தண்டனை உறுதி
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் கடந்த 2000மாவது ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகம்மது ஆரிப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஆரிப். இவன், கடந்த 2000மாவது ஆண்டு, டிசம்பர் 22ம் தேதி செங்கோட்டை மீது நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டான்.
அன்றைய தினம் செங்கோட்டைக்குள் புகுந்த தீவிரவாதிகள், ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று ராணுவத்தினர் பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் ஆரிப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை 2007ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து ஆரிப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இன்று அந்த வழக்கில்,ஆரிப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆரிப் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவனது வக்கீல் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications