கோவில்களில் அன்னதானம்- முதல்வருக்கு திருவாவடுதுறை ஆதினம் பாராட்டு
கன்னியாகுமரி: தமிழகத்தில் மேலும் 106 கோவில்களில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருவாவடுதுறை ஆதினம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடிகளப் பூஜை நடந்தது. இதன் 8-ம் திருவிழா திருவாவடுதுறை ஆதினம் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாவடுதுறை ஆதினம் 23வது குருமா சன்னிதானம் சிவபிரகாச தேசிக பரமாச்சிரய சுவாமிகள் நேற்று கன்னியாகுமரி வந்தார்.
கோவிலில் நடந்த பூஜைகளில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் மேலும் 106 திருக்கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். திருவாவடுதுறை ஆதினம் சார்பில் கன்னியாகுமரி, சுசிந்திரம், ராமேஸ்வரம், மயிலாடுதுறை, திருவையாறு ஆகிய இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றித் திரிவோரை கண்டறிந்து அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காசி முதல் கன்னியாகுமரி வரை 96 இடங்களில் உள்ள கோவில்களில் திருவாவடுதுறை ஆதினம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை அடுத்த பறக்கையில் ரூ.7 லட்சம் செலவில் திருவாவடுதுறை ஆதினம் சார்பில் கிளை மடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 24-ம் தேதி நடக்கிறது. இந்த கிளை மடத்தை நான் தான் திறந்து வைக்கிறேன்.
பாடசாலை நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். கன்னியாகுமரி வரும் பக்தர்களுக்கு இலவசமாக தங்கும் விடுதி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு துறவிகளும், சாதுக்களும், பக்தர்களும தங்கலாம். அவர்களுக்கு இலவசமாக அன்னதானமும் வழங்கப்படும் என்றார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications