லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது
குளித்தலை: குளித்தலை அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நெய்தலூர் காலனியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(50). அதே பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவர் ரைஸ் மில்லுக்கு தனி மின்கம்பம் மற்றும் மின் இணைப்பு பெறுவதற்காக, சின்னப்பனையூர் துணை மின் நிலைய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதை ஆய்வு செய்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணன், சுந்தர்ராஜிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். சுந்தர்ராஜன் முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாயை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணனிடம் கொடுத்துள்ளார்.
மேலும், தனக்கு பணம் வேண்டும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணன் கேட்டுள்ளார். ஆனால் மீண்டும் பணம் கொடுக்க விரும்பாத சுந்தர்ராஜன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதியிடம் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சின்னப்பனையூர் துணை மின் நிலையத்தில் இருந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணிடம், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜன் கொடுத்தார்.
அப்போது, அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.அம்பிகாபதி உள்ளிட்ட போலீசார், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்பு , திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள நாராயணன் வீட்டில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications