ரூ.265.54 கோடி நஷ்டத்தை சந்தித்த மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!
மும்பை: எரிப்பொருள் விலையேற்றம், குறைந்த பயணக் கட்டண வசூல் ஆகிய காரணங்களால், மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2வது காலாண்டில் 265.54 கோடி ரூபாய் அதிக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
கடந்த ஏப்ரல்- ஜூன் இடையேயான 2வது காலாண்டில் பள்ளி, கல்லூரி விடுமுறைகளால், விமானப் போக்குவரத்து வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலும் எரிப்பொருள் உயர்வு காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த காலாண்டில், 123.16 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்தாண்டில், இதே காலகட்டத்தில் ரூ 3.52 கோடி லாபத்தில் இயங்கி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்த இடத்தில் உள்ள கிங்பிஷர் நிறுவனம், 263.54 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதே நிறுவனம் கடந்தாண்டு 187.34 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.
இரண்டாம் காலாண்டில் மட்டும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எரிப்பொருள் விலை 44.32 சதவீதம் உயர்ந்து, 845.13 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதுகுறித்து கிங்பிஷசர் நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், "நாட்டில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி 15 சதவீதத்தை அடைந்ததுள்ளது. ஆனால், இன்னும் 19 சதவீத வளர்ச்சித் தேவைப்படுகிறது.
கிங்பிஷர் நிறுவனம் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தை 4 சதவீத உயர்த்த முயன்று வருகிறது. ஆனால் அதே வேளையில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் 2 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது, என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்துள்ளது.
மும்பை பங்கு சந்தையில், நேற்று கிங்பிஷசர் நிறுவனத்தின் பங்குகள் 2.57 சதவீதம் ஏற்றம் கண்டு, 31.90 ரூபாய்க்கு விற்பனையானது.
இதற்கிடையே, கிங்பிஷசர் நிறுவனத்தின் 23.21 சதவீத பங்குகளை, ஸ்டேட் பங்க், ஐ.சி.ஐ.சி.ஐ.,உள்ளிட்ட 13 வங்கிகள் வாங்கியுள்ளன. இதில் ஸ்டேட் பங்க் 5.67 சதவீதத்தையும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 5.3 சதவீதத்தை யும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications