அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் ரெய்ட்: துப்பாக்கி, 100 தோட்டாக்கள் பறிமுதல்
தூத்துக்குடி: திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி கந்தன் காலனி, டூவிபுரத்தில் உள்ள அவரது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு துப்பாக்கியும், 100 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை 2 பேர் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றனர்.
இந்த வழக்கில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி வெடிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டிவிட்டதால் தான் சசிகுமார் என்னைக் கொல்ல முயன்றார். அதற்கு பழிவாங்கத் தான் அவரைக் கொன்றோம் என்று விசாரணையில் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து குரும்பூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று மாலை அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை தூத்துக்குடி சிப்காட், வைகுண்டம், ஆறுமுகநேரி காவல் நிலையங்களுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். டிஐஜி வரதராஜு, எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கொலை முயற்சி, கூட்டு சதி ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனை வேனில் ஏற்றி நீதிமன்றம் அருகே உள்ள மாஜிஸ்திரேட் பரிதா வீட்டில் ஆஜர்படுத்தினர். அனிதாவுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட ஆல்நாத்தும் ஆஜர்படுத்தப்பட்டார். இருவரையும் 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் நள்ளிரவு 1 மணிக்கு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு இரவு 2 மணி அளவில் திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக போலீஸ் பிடியில் சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில்,
செய்யாத குற்றத்திற்காக சசிகலா தூண்டுதலின் பேரில் தான் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இதற்காக நான் அஞ்ச மாட்டேன். எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.
இந்நிலையில் தூத்துக்குடி கந்தன் காலனி, டூவிபுரத்தில் உள்ள அவரது வீடுகளின் இன்று மதியம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு துப்பாக்கியும், 100 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிக்கு அவரிடம் உரிமம் உள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 தோட்டாக்கள் அதிகமாக வைத்திருந்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications