சமச்சீர் கல்வித் திட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை வெற்றி விழாவாக நடத்தும் திமுக!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறது திமுக. இதற்காக பொதுக் கூட்டங்கள் நடத்தவும் அது முடிவு செய்து அறிவித்துள்ளது.
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பாக இந்த வெற்றி விழாப் பொதுக் கூட்டங்கள் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறுகிறதாம்.
திருவள்ளூரில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின், திருச்சியில் துரைமுருகன், திருவண்ணாமலையில் பொன்முடி, நாமக்கல்லில் பரிதி இளம்வழுதி, புதுக்கோட்டையில் எஸ்.பி.சற்குண பாண்டியன், மதுரையில் கோவை மு.ராமநாதன், வேலூரில் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கலந்து கொண்டு பேசவுள்ளனராம்.












Click it and Unblock the Notifications