சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து தனியார் பஸ்கள் 5வது நாளாக ஸ்ட்ரைக்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து 5 வது நாளாக தனியார் பஸ்களின் போராட்டம் தொடர்கிறது.
கிருஷ்ணகிரி டோல்கேட் வழியாக செல்லும் தனியார் பஸ்களுக்கு மாதத்திற்கு 5,515 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு முறை செல்ல 250 ரூபாய் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் அறிவித்தது. பள்ளி, கல்லூரி பஸ்களுக்கும் டோல் கேட் கட்டணமும் உயர்த்தப்பட்டது.
இதனால் மாதத்திற்கு டோல்கேட்டில், பல ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கடந்த 8ம் தேதி காலை முதல் கிருஷ்ணகிரி-ஒசூர் சாலையில் அனைத்து தனியார் பஸ்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளன.
இதன் அடையாளமாக, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே தனியார் பஸ்களும், பள்ளி, கல்லூரி பஸ்களும் நிறுத்தப்பட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 5 வது நாளாக தனியார் பேருந்துகள் போராட்டம் தொடர்கிறது. எனவே, இப்பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட பொது மக்கள் அரசுக்கு கோரி்க்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications