பாமக தலைவர் ஜி.கே.மணியின் விமர்சனத்திற்கு மாஜி அமைச்சர் பொன்முடி சாட்டையடி பதில்

பாமக இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் டிவிக்கு அளித்த பேட்டியொன்றில் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தை விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் குடும்பத்தினர், அவரதுசம்பந்தி குடும்பத்தினர் உள்ளிட்ட எத்தனை பேர் அரசியலில் உள்ளனர், என்னென்ன பதவிகளில் உள்ளனர், அன்புமணிக்கு எம்.பி. பதவி வாங்க ராமதாஸ் துடித்த துடிப்பு உள்ளிட்டவற்றை விவரித்து பெரிய பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டார் பொன்முடி.
இதைக் கண்டித்து பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டார். அதற்கும் ஒரு பதிலடி கொடுத்துள்ளார் பொன்முடி. அதில் அவர் கூறியுள்ளதாவது:
அன்புமணி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி சொன்னதற்கு நான் அளித்த பதிலால் அவருக்குக் கூட வராத கோபம், கோ.க.மணிக்கு வந்திருப்பது ஏன் என யோசித்தேன். பிறகு தான் புரிந்தது, தன்னுடைய மகன் தமிழ்க் குமரனை சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க வைத்து அழகு பார்த்தவருக்குக் கோபம் வராதா என்ன?
என் மனைவியோ, பிள்ளைகளோ அன்றும் - இன்றும் - என்றும் திமுகதான். கட்சிக்காக பணியாற்றுபவர்கள்தான். நல்ல வேளையாக யாரோ வற்புறுத்துகின்றார்கள் என்று சொல்லி என் பிள்ளை சட்டமன்றத்திற்கும் நிற்க வைக்கவில்லை. பாராளுமன்றத்திற்கும் நிற்கவைக்கவில்லை.
உங்களுக்கு என்று வந்து விட்டால் அது அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம். 75 ஆண்டு கால பொது வாழ்க்கைச் சொந்தக்காரரான கலைஞர் குடும்பம் என்றால் பாரம்பரியம் இல்லையா? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக செஞ்சியாரைப் பற்றியும், ஏ.ஜி.சம்பத்தைப் பற்றியும் திடீர் சமுதாய அக்கறையோடு பேசும் அன்பிற்குரிய கோ.க.மணி அவர்களே,
அருள் கூர்ந்து உங்கள் கட்சியில் முதல் முதலாக வெற்றி பெற்று யானை மேல் அம்பாரி போன பண்ருட்டி ராமச்சந்திரன் - உங்கள் கட்சி வேட்பாளராக என்னை எதிர்த்து விழுப்புரம் சட்டமன்றத் தேர்தலில் நிறுத்தினீர்களே - நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி - நண்பர் தீரன் - பூ.தா.இளங்கோவன், பூ.தா.அருள்மொழி இவர்கள் எல்லாம் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று விரட்டினீர்கள்.
அவ்வளவு ஏன்? டாக்டர் அய்யாவின் சொந்தத் தம்பி சீனுக்கவுண்டர் அவர்கள் வெளியேறக் காரணம் என்ன? தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் பதவி ஆசையே இல்லாத பாமக தலைவர் அவர்களே, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக மனசாட்சியை மறந்துவிட்டுப் பேசாதீர்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பொன்முடி.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்!












Click it and Unblock the Notifications