மும்பை: சூட்கேஸ் தயாரிப்பாளர்களான விஐபி நிறுவனம் இந்த நிதியாண்டில் 25 முதல் 30 சதவீத வளர்ச்சியை குறி வைத்து பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.அதன் ஒரு பகுதியாக இளைஞர்களைக் கவரும் வகையிலான பல்வேறு வகையான பேக்குகளை அது தயாரிக்கவுள்ளது.
இதுகுறித்து விஐபி நிறுவன தலைவர் திலீப் பிரமால் கூறுகையில், இளைஞர்களைக் குறி வைத்து நாங்கள் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். பல்வேறு டிசைன்களில் கைப்பைகளை தயாரிக்கவும், சூட்கேஸ்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆண்டு எங்களது வருவாய் ரூ. 975கோடியாக இருக்கும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
எங்களது ஸ்கைபேக் பிராண்டுக்கான விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாமை ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும், புத்தம் புதிய கார்ல்டன் வகையை அறிமுகம் செய்கிறோம். அதேபோல இந்த நிதியாண்டின் இறுதியில் புதிய வடிவிலான பெண்களுக்கான கைப்பைகளையும் அறிமுகம் செய்யவுள்ளோம் என்றார் அவர்.
Luggage-maker VIP Industries today said it is eyeing a 25-30 per cent topline growth, besides strengthening of its position in segments such as handbags and backpacks, this fiscal. "This year, we are looking at Rs 975 crore revenues," said VIP Industries Chairman Dilip Piramal, adding that the firm is now targeting the youth. "The problem is that when you are an established company, the youth are not able to identify with the brand. So we are now targeting them," he said.