இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்
கொழும்பு: இன்டர்நெட் மையத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகளை மட்டக்களப்பு மாவட்டம் கட்டங்குடி என்ற இடத்தில் பொதுமக்கள் தாக்கிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியைத் தாக்கியவர்கள் அனைவருமே ஆண்கள்.
கட்டங்குடி பகுதியில் தமிழ் பேசும் முஸ்லீம்கள்தான் பெருமளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள மத அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 2 டீன் ஏஜ் வயதுப் பெண்களை சிலர் சரமரியாக அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில், இந்த இரு சிறுமியரும் ஆபாசப் படம் பார்த்ததாக அடித்தவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இந்த 2 பெண்கள் தவறு செய்ததால், தண்டிக்கப்பட்டனர் என அலுவலக மைக்கில் தெரிவிக்கப்பட்டது.
இதில் ஆவேசமடைந்த அப்பகுதியினரும், இளம்பெண்களை அடிக்க ஆரம்பித்தனர். இதற்கு 2 சிறுமிகளின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த, அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தவறு செய்ததாக அடித்து, உதைக்கப்பட்ட இளம்பெண்களை மீட்டனர்.
ஆனால் தாங்கள் அதுபோல படம் எதுவும் பார்க்கவில்லை என்றும் பொய்யான புகாரின் பேரில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த இரு சிறுமிகளும் கூறியுள்ளனர். மேலும் இன்டர்நெட் மையத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஆபாசப் படம் பார்த்தது தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இரு சிறுமிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications