என் மீதான காங்கிரஸின் ஊழல் புகாரை காங். நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம்- அன்னா

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தும் பிரதிநிதிகள் மீது காங்கிரஸ் கட்சி பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறது.

இப்போது என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீதிபதி சாவந்த் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நான் ஊழல் செய்தேன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி என் மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தட்டும்.

ஊழல் செய்ததாக நிரூபித்தால் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அப்படியில்லை என்றால் நான் குற்றமற்றவன் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்வரை எனது போராட்டம் தொடரும்.

கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அமைப்புக்கு நிதி அளித்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் தயார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து வருபவர்களின் விவரங்களையும் கட்சியின் செலவுகளையும் வெளியிடத் தயாரா.

ஊழலுக்கு எதிராக எங்கள் அமைப்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதால் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

டெல்லியில், செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். கூட்டத்தில் தொண்டர்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் யாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+