தமிழகம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம்-கலெக்டர்கள் கொடியேற்றினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை தமிழகம் முழுவதும் சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
நாட்டின் 65வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைத்தார். அதேபோல மாநிலம் முழுவதும் கலெக்டர்கள் தேசியக் கொடியேற்றினர்.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஏ.அண்ணாமலை தேசியக் கொடியேற்றி வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அதேபோல பிற மாவட்டத் தலைநகர்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தேசியக் கொடியேற்றினர்.
இதேபோல பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை சார்பிலும் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications