மும்பையில் தமிழர்கள் அதிக வாழும் தாராவியில் சென்ட் நிலத்திற்கு ரூ.1 கோடி விலை

இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான மும்பையில், மராட்டியர் அல்லாத மற்ற மாநிலத்தினர் அதிகம் வாழம் பகுதி தாராவி. இங்கு, தமிழகம்,பீகார், உத்தர பிரதேசம், அசாம் என உள்ளிட்ட மாநிலத்தினர் வசிக்கின்றனர். இதிலும் தமிழர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
தாராவியில் இருந்து மும்பையின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்றுவிடலாம். அதாவது, மும்பை விமான நிலையம் 12 கி.மீ.,தூரத்திலும், 4 ரயி்ல் நிலையங்கள் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. இதனால், இங்கு அதிகளவிலான மக்கள் நெரிசலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான வீடுகள், குடிசை அல்லது தகரத்தால் ஆனாது. வீடுகள் 100 முதல் 200 சதுர அடி அளவில் தான் இருக்கும். மும்பையின் நடுப்பகுதியில் உள்ள தாராவின் மொத்த பரப்பளவு 530 ஏக்கர். அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மிக குறுகிய அளவிலான வீடுகளில் மக்கள் நெருக்கத்துடன் வசித்தாலும், டிவி, பீரோ, மிக்ஸி, மொபைல்போன் என அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கழிவறை இருப்பதில்லை. பொது கழிவறையை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
மும்பையிலேயே மிகவும் நெருக்கடியான தாராவியில் தற்போது நிலம் வாங்குவது குதிரை கொம்பாக மாறியுள்ளது. 1 சென்ட் நிலத்திற்கு 1 கோடி ரூபாய் என்று விற்கப்படுகிறது. சில உள்புறமான இடங்களில் மட்டும் சற்றுக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மேலும் 1 அறை மட்டுமே கொண்ட வீடுகளுக்கு 3 முதல் 6 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.
தாராவியின் இந்த விலையேற்றத்திற்கு பிறகும், இங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு குடிப்பெயர முயல்வதில்லை. இங்கு வசிக்கும் பலரும் தங்கள் பொருளாதார நிலைகளை உயர்த்தி உள்ள போதும், இங்கிருந்து இடமாறவில்லை.
இதை எல்லாவற்றையும் கடந்து, மொழி, இனம் மதம் ஆகிய பிரிவினைகள் இந்த பகுதியில் குறைந்தே காணப்படுகிறது. ஆனால், பணம் பார்க்க ஆசைப்படும் சிலரும் இல்லாமல் இல்லை. விலை அதிகம் தரும் பெரிய நிறுவனங்களுக்கு தங்கள் நிலங்களை விற்று விட்டு, செல்பவர்களையும் இங்கு காணலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications