நேபாள பிரதமர் ஜலாநாத் கானல் திடீர் ராஜினாமா
காத்மாண்டு: நேபாள பிரமர் ஜலாநாத் கானல் நேற்று திடீரென தனது ராஜினாமா கடிதத்தை, அந்நாட்டு ஜனாதிபதியிடம் அளித்துள்ளார்.
நோபாள நாட்டின் பிரதமர் ஜலாநாத் கானல், கடந்த பிப்ரவரி மாதம் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இவர், மாவோயிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்டார்.
இதில், வெற்றிப் பெற்று பிரதமரான ஜலாநாத் கானல், நாட்டில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறினார். இந்நிலையில் எதிர்கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் பதவியை ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தி வந்தனர்.
நெருக்கடியில் தவித்த ஜலாநாத் கானல், நேற்று மாலையில் தனது ராஜினாமா கடிதத்தை நேபாள ஜனாதிபதி ராம் பிராம் யாதவ்விடம் வழங்கினார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாபதிபதி, அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
தொடர் அரசியல் நெருக்கடி நலவி வரும் நேபாள நாட்டிற்கு அடுத்த பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இந்நிலையில், எதிர்கட்சியினர் அல்லது மாவேயிஸ்ட் தலைமை ஆட்சியமைக்க, ஜனாபதியிடம் கேட்கலாம் எனத் தெரிகிறது. ஜலாபநாத் கானல் உட்பட நேபாளத்தில் ஆட்சி அமைத்த 4 அரசுகள் கவிழ்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
