ஆப்கானிஸ்தான் ஆளுநர் மாளிகையை தாக்கிய தாலிபான் தீவிரவாதிகள்: 22 பேர் பலி
சாரிகர்: ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாண ஆளுநர் மாளிக்கைக்குள் 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கில் சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது சாரிகர். பர்வான் மாகாணத்தின் தலைநகர். இந்த மாகாண ஆளுநரின் மாளிக்கைக்குள் 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். இதற்கு தாலிபான்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.
இந்த மாகாணத்தில் தான் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் விமானத் தளம் உள்ளது.
இந்த மாத துவக்கத்தில் பர்வான் மாகாணத்தில் தாலிபான்கள் ஒரு ஹெலிகாப்டரை சுட்டுத் தள்ளினர். இதில் 38 அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் படையினர் உயிர் இழந்தனர்.
கடந்த ஜூன் மாத இறுதியில் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்-கான்டினென்டல் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 21 பேர் பலியாகினர்.
கந்தஹார் மற்றும் ஹெல்மாந்த் போன்றவை தாலிபான்கள் ஆதிக்கத்தில் உள்ள இடங்கள் ஆகும். கிழக்கு பகுதிகள் பாகிஸ்தான் தாலிபான்கள், அல் கொய்தா மற்றும் ஹக்கானி அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ளது.
பர்வான் மாகாண ஆளுநர் மாளிகையில் நடந்த தாக்குதல் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது,
6 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். அதில் ஒருவன் கேட்டுக்கு முன்பு கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் மாளிகைச் சுவரில் ஓட்டை விழுந்தது. அது வழியாக 5 தீவிரவாதிகள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அதி நவீன துப்பாக்கிகள், கிரனேட் போன்றவற்றை வைத்திருந்தனர். அவர்களில் 3 பேரை சுட்டுக் கொன்றோம்.
அந்த நேரத்தில் ஆளுநர் அப்துல் பாசிர் சலாங்கி தலைமை போலீஸ் அதிகாரி, உளவுத்துறை தலைவர், உள்ளூர் ராணுவத் தளபதி மற்று 2 நேட்டோ ஆலோசகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்றனர்.
நானும், மற்ற அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய அறையில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியால் தீவிரவாதிகளைத் தாக்கினோம். நானே ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றேன். என்னைக் கொல்ல நடக்கும் இரண்டாவது முயற்சி இது. என்னிடம் ஏகே 47 ரக துப்பாக்கி இருந்தது. அதை வைத்து நான் ஜன்னல் வழியாக தீவிரவாதிகளை சுட்டேன் என்றார்.
இந்த துப்பாக்கிச் சூடு சுமார் 1 மணி நேரம் நீடித்தது என்று அதில் கலந்து கொண்ட மாகாண போலீஸ் அதிகாரி ஷெர் அகமது மாலதானி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications