சிக்கன் குனியா காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு-அமெரிக்க ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: நோய் ஏற்பட்ட 3 நாட்களுக்கு கடும் காய்ச்சலும், பல வாரங்களுக்கு உடல் வலியை ஏற்படுத்தும் சிக்கன் குனியா நோய்க்கான தடுப்பூசியை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் டாக்சஸ், விஸ்கோன்சின், அலபாமா ஆகிய பல்கலை கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, சிக்கன் குனியா காய்ச்சலுக்கான நோய் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2006ம் இந்தியாவின் பல மாநிலங்களின் இந்நோயின் தாக்கம் காணப்பட்டது.
கொசுக்களால் பரவும் நோயில் ஒன்றான சிக்கன் குனியா, முதல் 3 நாட்களுக்கு காய்ச்சலுடன் துவங்குகிறது. அதன்பின் உடல்வலியை ஏற்படுத்தி, 3 மாதங்கள் வரை நோயாளியை சிரமத்திற்குள்ளாகி விடுகிறது. இதை தடுப்பதற்கோ, நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பதற்கோ இதற்கென பிரத்யேகமான மருந்துகள் இல்லாமல் இருந்தது. இதனால், காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு அளிக்கப்படும் பாராசிட்டமால் மற்றும் டானிக்குகளே மருத்தாக பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க பல்கலையின் ஆராய்ச்சியாளர்கள், சிக்கன் குனியா வருவதற்கு முன் போடப்படும் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து எலிகளுக்கு சோதனை அடிப்படையில் கொடுத்ததில், ஆராய்ச்சியாளர்கள் வெற்றிக் கண்டுள்ளனர். மனிதனுக்கு அளித்து பரிசோதனை நடந்து பின் இவை மருந்தாக அங்கீகரிக்கப்படும். இதற்கு 2 ஆண்டுகள் ஆகும் என ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், மனித பரிசோதனையில் வெற்றி பெறும் நிலையில், வெளிநாட்டு பயணிகளை பீதிக்குள்ளாக்கும் சிக்கன் குனியாவை, ஆசிய நாடுகளில் இருந்து விரட்ட முடியும், என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications