இடம் பெயர்ந்த அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்-காரணம் என்ன?
கரூர்: அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த எம். ராமசந்திரன் திடீரென அவரது பொறுப்பிலிருந்து வேறு பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வினரால் எம்.ஆர். என்று அழைக்கப்படும் எம். ராமச்சந்திரன் வேறு யாருமல்ல, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கொழுந்தன் ஆவார். அதாவது சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் தம்பிதான் இந்த ராமச்சந்திரன்.
இதில் எம். ராமசந்திரன், இராவணன், கலியபெருமாள், மிடாஸ் மோகன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்து சக்தி வாய்ந்தவர்கள் ஆவர்.
இந்த சக்தி வாய்ந்த குழுவில் இருந்தவரான ராமச்சந்திரனை தற்போது டீ எஸ்டேட் வேலைகளைப் பார்க்க அனுப்பி விட்டாராம் முதல்வர் ஜெயலலிதா. முன்பு, முன்பு, கட்சியினரின் கோரிக்கை மனுக்களை கட்சி அலுவலகத்திலிருந்து தினமும் போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லும் பணியில் இருந்தார் எம். ராமசந்திரன்.
இவரைப் பார்த்து கட்சியின் 2ம் மட்டத் தலைவர்கள் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்களாம். இவரைப் பகைத்துக் கொண்டால் அம்மாவிடம் நமது கோரிக்கைகள் போய்ச் சேராது என்ற அச்சமே இதற்குக் காரணம்.
தற்போது ராமச்சந்திரன் திடீரென பொறுப்பு மாற்றம் கண்டிருப்பது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது பனிஷ்மென்ட்டா அல்லது பொறுப்பானவர் என்பதால் வேறு முக்கியப் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications