கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்-கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

வள்ளியூர்: கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடன்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு பஞ் தலைவர் எழிலரசி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான போதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அடியோடு அழிக்கும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காத வண்ணம், காற்றாலை, சூரிய சக்தி, கடல் அலைளிலிருந்து மின்சாரம் தயாரிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அணுமின் நிலைய நிர்வாகத்தால் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் மக்களை பாதிக்காத பல தொழிற்சாலைகளை தொடங்கி மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த தீர்மானிக்கபட்டது.

இன்று ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தைக்கு மிக குறைந்த அளவிலான நபர்களையே அழைத்துள்ளதால் அதை புறககணிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கூடன்குளசம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

இன்று இடிந்தகரையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடன்குளத்தில் கடையடைப்பு செய்யவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கவும், கூடன்குளத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓப்பந்தக்காரர்கள், பணியாளர்களை வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க போராட்டகுழு வேண்டுகோள் விடுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+