உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்: நல்லக்கண்ணு நம்பிக்கை
தருமபுரி: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர். நல்லக்கண்ணு கூறியதாவது, தமிழகத்தில் விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி தொடரும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக அதிகாரங்களை வழங்க வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நேரடி தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும். கடந்த 1976ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிலமீட்பு போராட்டத்தை நடத்திய போது அப்போதைய முதல்வர் கருணாநிதி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றார்.
நில பறிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களே நேரடியாக போலீசாரிடம் புகார் செய்கின்றனர். இதில் பொய் வழக்கு, பழிவாங்கும் நடவடிக்கை இருக்க வாய்ப்பில்லை. நிலபறிப்பை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலமோசடிகளை தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. லோக்பால் சட்டம் குறித்த முன்வடிவு கடந்த 1969 ல் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த 41 ஆண்டுகளாக இது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பிரதமரும் ஒரு எம்.பி. என்பதால் அவரையும் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஊழலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தினால் அது சட்ட விரோதம் என்று மத்திய அரசு தடுக்கிறது. இது காங்கிரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
இவ்வாறு நல்லக் கண்ணு கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications