சொத்து குவிப்பு: நல்லம நாயுடுவை விசாரிக்க கோரும் சசி மனு மீது 20ம் தேதி தீர்ப்பு
பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கில் விசாரணை அதிகாரியான நல்லம நாயுடுவை நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது வரும் 20ம் தேதி பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான நல்லம நாயுடுவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், விசாரணை அதிகாரியை அழைத்து விசாரிக்கக் கோரும் மனு மீது சுமார் 2 மணி நேரம் நேரம் வாதிட்டார். அவர் கூறுகையில், சாட்சிகள் முதல் முறையாக விசாரிக்கும்போது ஒரு மாதிரியாகவும், மறு விசாரணை நடத்தும்போது வேறு மாதிரியாகவும் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் சிலர் கூறிய தகவல்கள் முரண்பாடாக உள்ளன. இதனால் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை அழைத்து விசாரித்தால்தான் அதற்கு தீர்வு கிடைக்கும். எனவே, எங்களது தரப்பின் நியாயங்களை ஏற்று இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
இதை எதிர்த்து வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விசாரணை அதிகாரியிடம் விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இருதரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கை 20ம்ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் சசிகலா, இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications