ஆளுநர் உத்தரவு கிடைத்த 7ம் நாள் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு: சிறைத்துறை ஏடிஜிபி
சென்னை: ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7ம் நாள் ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை வேலூர் சிறையில் தூக்கிலிடுவோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மனுக்களை பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது. ஆனால் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அந்த 3 பேரும் எப்பொழுது தூக்கிலிடப்படுவார்கள் என்று கேட்டதற்கு, சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா கூறியதாவது,
ராஜீவ் காந்தி கொலையாளிகள் 3 பேரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான உத்தரவு ஆளுநரிடம் இருந்து வர வேண்டும். அதற்காகத் தான் காத்திருக்கிறோம். ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் அவர்கள் 3 பேரையும் வேலூர் சிறையில் வைத்து தூக்கிலிடுவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications