சசிகலாவின் சகோதரி வனிதாவின் உடல் மன்னார்குடியில் தகனம்
மன்னார்குடி: முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் அக்காள் வனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் தகனம் செய்யப்பட்டது.
மன்னார்குடி மன்னை நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தம். திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வனிதா மணி (65). சசிகலாவின் அக்காளான இவர் மாரடைப்பால் திருச்சியில் அவரது இல்லத்தில் நேற்று அதிகாலை மரணமடைந்தார்.
வனிதா மணியின் உடல் மன்னார்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 9 மணிக்கு பாமணி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
வனிதா மணியின் மகன்கள் தான் தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் ஆவர். இவருக்கு சீதாதேவி என்ற மகளும் உள்ளார்.
வனிதாவின் மகன் சுதாகரனைதான் ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தார். கடந்த அதிமுக ஆட்சியில் சுதாகரன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வனிதாவின் மறைவையடுத்து சசிகலா மன்னார்குடி வந்தார். அதே போல முதல்வர் ஜெயலலிதாவும் அஞ்சலி செலுத்த வருவார் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications