ஒண்டிவீரன் வீரவணக்க நாளை அரசு விழாவாக அறிவி்க்க இ.ம.க. காமராஜ் கோரி்க்கை
மதுரை: ஒண்டிவீரன் வீரவணக்க நாளை அரசு விழாவாக அறிவி்த்து அதில், முதல்வர் அல்லது தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும் என, இந்திய மக்கள் கட்சி நிறுவன தலைவர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்புறம் உள்ள கல்குவாரி புறம்போக்கு உள்ள 2567 சதுர மீட்டர் நிலத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு, தற்போது அந்த பணிகளை நடந்து வருகின்றது.
இந்திய மக்கள் கட்சி நிறுவன தலைவர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர் கொண்டு தங்களையே தியாகம் செய்த தலித் தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில், வீரன் இரட்டைமலை சீனிவாசன், வீரன் சுந்திரலிங்கம் ஆகியோரது வீரவணக்க நாளை, அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது. அதேபோல, ஒண்டிவீரணின் வீரவணக்க நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்தோம். கடந்த தி.மு.க., ஆட்சியில் ஒண்டிவீரணுக்கு மணி மண்டபம் கட்டுவதாக கூறிய கருணாநிதி தேர்தல் நேரத்தில் தான் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோதே இதை செய்திருந்தால், இப்போது மணி மண்டபத்தின் பணிகள் முடிந்திருக்கும். தேர்தலில் அருந்ததியர் வாக்குகளை குறிவைத்து தான் இப்படி செயல்பட்டார். ஒண்டிவீரன் பிறந்த ஊரான செற்கட்டும்சேவல் பச்சேரியில் அவருக்கு மணி மண்டம் கட்டுவதகற்கு பதில் ஊருக்கு வெளியே, சம்பந்தமே இல்லாமல் திருநெல்வேலி நீதி மன்றம் அருகே இடம் ஒதுக்கியுள்ளனர்.
இதிலிருந்து ஒண்டிவீரணுக்கு தி.மு.க., அரசு கொடுத்த முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம். ஒண்டிவீரன் வீரவணக்க நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரி்க்கை கடந்த பல வருடங்களாக தமிழக அரசிடம் வைத்துள்ளோம்.
எனவே, வரும் ஆகஸ்ட் 20ம் தேதியை ஒண்டிவீரன் வீரவணக்க நாளை அரசு விழாவாக அறிவி்த்து அதில், முதல்வர் அல்லது தமிழக அமைச்சர்களை கலந்து கொண்டு கவுரவிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரி்க்கை. இதை தமிழக முதல்வர் நிறைவேற்றி வைக்க வேண்டுகின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications