தமிழகத்தில் புதிதாக 8 தொழிற்பேட்டைகள்!
சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) மூலம் நடப்பாண்டில் 8 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் சி. சண்முகவேலு தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அவர் பேசுகையில், "பயன்பாட்டில் இல்லாத அரசு நிறுவனங்களின் நிலங்களைப் பெற்று தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) மூலம் புதிய தொழிற்பேட்டைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிட்கோ நிறுவனம் மூலம் 92 தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன.
தஞ்சாவூர் பாலயப்பட்டி, வேலூர் வாணியம்பாடி, விருதுநகர் மாநகர்புறம், புதுக்கோட்டை மாத்தூர், திருப்பூர் ராசாத்தவலசு, விழுப்புரம் வெண்மணி ஆத்தூர், தூத்துக்குடி பிடாநேரி, தேனி மரிக்குண்டு ஆகிய 8 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் சிட்கோ மூலம் இந்த நிதியாண்டுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் மத்திய அரசின் குழுமத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே இயங்கி வரும் 8 தொழிற்பேட்டைகளை ரூ. 27.49 கோடியில் மேம்படுத்தவும், ரூ. 23.50 கோடியில் 7 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சிட்கோவை புனரமைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். அக்குழுக்களின் பரிந்துரையின்படி எளிமையான முறையில் தொழில் முனைவோர்களுக்கு உதவும் நிறுவனமாக சிட்கோ உருவாக்கப்படும்.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் இருந்து 25 கி.மீ. சுற்றளவுக்குள் குறு உற்பத்தி நிறுவனங்களுக்காக சிட்கோ மூலம் அடுக்குமாடி தொழிற்பேட்டைகள் 2010-க்குள் அமைக்கப்படும் என்று கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் தொடர்பாக இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த குழு அமைக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்.
கிண்டி தொழிற்பேட்டையில் சிட்கோ தலைமை அலுவலக் கட்டடப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக தொடக்க நிலையிலேயே உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டடப் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நில ஒதுக்கீட்டுக்கான விலைக் கொள்கை, நில வங்கி உருவாக்குதல், அது தொடர்பான நடைமுறைகளை எளிதாக்குதல் ஆகியவற்றின் மூலம் சிட்கோவின் செயல்பாடுகள் எளிமையாக்கப்படும்," என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications