அன்னா போராட்டத்தின் விளைவால் தேசியக் கொடிகளுக்கு கிராக்கி-ஒரு கொடி ரூ. 500 விற்பனை
டெல்லி: அன்னா ஹஸாரேவின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களில் குதித்திருப்பதால் தேசியக் கொடிக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சின்னக் கொடி முதல் பெரிய கொடி வரை பெருமளவில் விற்பனையாகி வருகிறது. கொடிகள் பற்றாக்குறை ஏற்பட்டு கூடுதல் கொடிகள் கேட்டு ஆர்டர் கொடுக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் போராடி வருகின்றனர்.அவர்களுடன் இணைந்து மக்களும் தற்போது ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் தேசியக் கொடிகளுடன்தான் களத்தில் இறங்கியுள்ளனர்.
சின்னக் கொடி முதல் பெரிய கொடி வரை தேசியக் கொடிகளுடன் அவர்கள் ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஈடுபட்டுள்ளனர். இதனால் தேசியக் கொடிகளுக்கு பெரும் கிராக்கியும், பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இந்தியா கேட், ராம் லீலா மைதானம், ராஜ்காட் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. சின்னக் கொடி முதல் பெரிய கொடி வரை இங்கு விற்கப்படுகிறது. இவை அனைத்தும் வழக்கமான விலையை விட கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது.
சாதாரணமாக ரூ. 250க்கு விற்கப்படும் நடுத்தர ரக தேசியக் கொடி தற்போது 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். கொடிகள் போதுமான அளவில் ஸ்டாக் இல்லாததால் கொடி விற்பனையாளர்கள் கூடுதல் கொடிகளைக் கேட்டு உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளனராம்.
வழக்கமாக சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் பெருமளவில் விற்பனை செய்யப்படும். தற்போது அன்னாவின் போராட்டம் காரணமாக ஏற்கனவே கூடுதலான கொடிகளை அச்சிட்டு விற்பனைக்கு அனுப்பியிருந்தனர். அவை அனைத்தும் தீர்ந்து விட்டதால் தற்போது புதிதாக பெருமளவில் கொடிகளை அச்சிடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.
நாட்டின் பல பகுதிகளும் கொடிகள் அச்சிடும் பணி முழுவேகத்தில் நடந்து வருவதாகவும், பெருமளவில்ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது குறைந்தது ரூ. 50 முதல் ரூ. 500 வரை கொடிகள் விற்பனையாகிறதாம்.
இப்படி தேசியக் கொடிகள் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதால் கொடிகளை அவமதிக்கும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது தேசியக் கொடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications