நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப்பு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 17ம் தேதி அன்று தொழில்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி என்மீது அபாண்டமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
நான் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை வளைத்து சில கூட்டாளிகளை சேர்த்து கிரானைட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அது தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார்.
நான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபட்டவன் அல்ல. வேலுமணி பொய் குற்றச்சாட்டுக்களை என்மீது சட்டப் பேரவையிலேயே சுமத்த துணிந்தார் என்றால், அவர் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும். அல்லது அவரது பொய் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இதை நான் சும்மா விட்டுவிடமாட்டேன்.
வேலுமணி மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பேன். மேலும் என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் சட்டப் பேரவையையே பயன்படுத்தி உள்ள வேலுமணி என் மீது சுமத்தி உள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவேண்டும். நிரூபிக்கத் தவறினால் அவர் அமைச்சர் பதவி மட்டுமல்ல, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்.
என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி நான் வகிக்கும் பொறுப்புகளுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் தமிழக சட்டப் பேரவையை தவறாக பயன்படுத்தியுள்ள வேலுமணியிடம் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுகான ஆதாரங்களை பெற வேண்டும் என சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்படி ஆதாரங்களை 15 நாட்களுக்குள் வேலுமணி வழங்கத் தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அழகிரி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications