புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றத்திற்கு வாய்ப்பே இல்லை: இலங்கை அரசு
கொழும்பு: இறுதி கட்ட போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தற்போதைக்கு மீள் குடியேற்றம் செய்யும் வாய்ப்பே இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்து முடிந்தபாடில்லை. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் வடக்குப் பகுதியில் தற்போதைக்கு மீள் குடியேற்றம் செய்ய முடியாது என்று அரசின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் தான் இறுதி கட்ட போர் நடந்தது. அதனால் அப்பகுதிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பகுதிகள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் இந்த பகுதிகளில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னும் முடியவில்லை. அதனால் அங்கு இப்போதைக்கு மீள் குடியேற்றம் செய்யும் வாய்ப்பே இல்லை.
போரின்போது இடம்பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேர் மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல், கண்ணி வெடிகளை அகற்றாத பகுதிகளில் இருந்து அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பலவற்றை அரசு ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய நினைத்தால் அதற்கு சுமார் 25 ஆண்டுகள் ஆகும். வெகு விரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications