சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை-2 நாட்களுக்கு நீடிக்கும்
சென்னை : சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்தது. இன்றும் பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னையில் மட்டும் பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்து வந்தது. அவ்வப்போது மேகம் கூடுவதும், பின்னர் கலைவதுமாக கண்ணாமூச்சி ஆடி வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பல பகுதிகளில் மழை பெய்தது.
அண்ணா சாலை, அண்ணா நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
இன்று காலையிலும் பல பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. இதேபோல புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவில் நல்ல மழை பெய்தது.
இன்று காலை முதல் மழை பெரிய அளவில் இல்லை என்ற போதிலும் வெளிச்சத்தைக் காண முடியவில்லை. வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது.
வெப்பச் சலனம் காரணமாக பெய்து வரும் இந்த மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications