பாண்டியன், சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7 ரயில்களில் சி.பி.ஐ ரெய்ட்!

எம்ர்ஜென்சி கோட்டா, ரயில் பெட்டிகள் பராமரிப்பு, முதல் வகுப்பு ரயில் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் பெரும் முறைகேடுகள் நடப்பததாக வந்த புகார்களையடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் மெயில், திருவனந்தபுரம் மெயில் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சேதனையை நடத்தினர்.
ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்துவது, படுக்கை விரிப்புகளை துவைப்பது ஆகியவற்றின் காண்ட்ராக்டர்களில் பெரும் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தாமலேயே அதற்கான கட்டணம் காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதில் ரயில்வே அதிகாரிகள்-காண்ட்ராக்டர்கள் கூட்டுக் கொள்ளை குறித்து அறிய சிபிஐ இந்த அதிரடி சோதனையை நடத்தியுள்ளது.
அதே போல எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்களை ரயில்வே அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்குவதாகவும் புகார்கள் உள்ளன, இது குறித்து அறிய இந்த ரயில்களில் எமர்ஜென்சி கோட்டாவில் பயணித்த பயணிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் ஓடும் ரயிலில் வைத்தே விசாரணை நடத்தினர்.
கிட்டத்தட்ட 100 அதிகாரிகள் இந்த 7 ரயில்களிலும் அவை ஓடிக் கொண்டிருந்தபோதே சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனைகளையடுத்து மூத்த ரயில்வே அதிகாரிகள் பலர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்யலாம் என்று தெரிகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications