அன்னா ஹஸாரே சார்ந்த அகமதுநகர் மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் ஊழல் பெருச்சாளிகள்!

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
மும்பை: ஊழலை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹஸாரேவின் சொந்த மாவட்டமான மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதான சம்பவங்கள் பெருளமளவில் உள்ளதாம். இதுதொடர்பான வழக்குகளும் அதிக அளவில் நிலுவையில் உள்ளதாம்.

அன்னா ஹஸாரே அகமது நகர் மாவட்டம் ராலேகான் சித்தி பகுதியைச் சேர்ந்தவர். இந்த மாவட்டம் நாசிக் சரகத்தின் கீழ் வருகிறது. இந்த மாவட்டத்தில்தான் மகாராஷ்டிர மாநிலத்திலேயே அதிக அளவில் லஞ்ச, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

மேலும் கடந்த 2009ம் ஆண்டு முதல் இன்று வரை இந்த மாவட்டத்தில் பெருமளவில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாம்.

2010ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்ட மொத்த வழக்குகளில் 25 சதவீத வழக்குகள் நாசிக் சரகத்தில் பதிவாகியுள்ளன. இது 2009ம் ஆண்டு 19.4 சதவீதமாக இருந்தது. நாசிக் சரகத்தில் 2010ம் ஆண்டு மட்டும் 124 பேர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இது 2009ல் 78 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 500 முதல் பல லட்சம் வரை லஞ்சம் வாங்கிய வழக்குகள் நாசிக்கில் அதிக அளவில் பதிவாகியுள்ளன. பிடிபட்ட லஞ்சப் பேர்வழிகளில் 6 பேர் துணை கலெக்டர்கள் ஆவர். 2 பேர் அரசு டாக்டர்கள். 23 பேர் முதல் நிலை அரசு அதிகாரிகள் ஆவர்.

புனே சரகத்தில் 14 சதவீத லஞ்ச வழக்குகளே பதிவாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+