உரிமையாளரிடமே தனியார் கல்லூரியை விற்க முயன்ற மர்ம கும்பல் - போலீசார் வலை வீச்சு!
கரூர் : கரூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் கல்லூரியை விற்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கல்லூரி உரிமையாளரிடமே அதை விற்க முயன்றதால் இந்த மோசடி குறித்துத் தெரிய வந்தது.
கரூர் - கோவை ரோட்டில் வி.எஸ்.பி. என்ற தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி விற்பனைக்கு உள்ளதாக கடந்த 14 ம் தேதி ஆங்கில பத்திரிகை ஒன்றிலும், ஒரு சில இணையதளங்களிலும் விளம்பரம் வெளியாகி இருந்தது.
விற்பனைக்கு வேண்டுவோர் இத்துடன் இணைக்கப்பட்டிருந்த தொடர்பு எண்ணை கொள்ள வேண்டும் என சில செல் எண்களை கொடுத்துள்ளனர். மேலும், தங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாகவும், கல்லூரியின் விலை ரூபாய் 120 கோடி எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி உரிமையாளர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவரிடமே பேரம் பேசியுள்ளனர். இதைக் கேட்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அந்த தனியார் கல்லூரி உரிமையாளர் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாகராஜனிடம், குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி. நாகராஜன் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications