உலக அளவில் 125 முறை வாய்தா வாங்கி சாதனை படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதாதான்-ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: உலக அளவில் 125 முறை வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவை மட்டுமே சாரும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று தஞ்சாவூர் வந்தார் ஸ்டாலின். தஞ்சை அருகில் உள்ள சானூரப்பட்டியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கலியமூர்த்தியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கேட்டபோது, உலக அளவில் ஏறக்குறைய 125 முறை கோர்ட்டில் வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவைத் தான் சேரும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications