மீண்டும் திமுக ஆட்சி மலரும்: மத்திய அமைச்சர் நெப்போலியன் நம்பிக்கை
நெல்லை: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்று மத்திய அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மத நல்லிணக்க விழா நெல்லை கொக்கிரகுளத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை தாங்கினார்.
ராமசுப்பு எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், மாநகர் மாவட்ட் காங்கிரஸ தலைவர் சுந்தரராஜ பெருமாள், மேயர் ஏஎல் சுப்பிரமணியன், தங்கவேலு எம்.பி., மாநகர திமுக செயலாளர் மாலை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நெப்போலியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது,
உலகம் முழுவதும் உள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இஸ்லாமிய சமுதாயத்தினர் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். எந்த அலையிலும் திமுக என்ற படகு கவிழ்ந்து விடாது. கண்டிப்பாக கரை சேரும். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும். அதிமுக ஆட்சியில் சட்டசபையில் எதிர்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை. அந்த அளவுக்கு அராஜகம நடக்கிறது. திமுகவினர் துவண்டு விடாமல் உழைக்க வேண்டும் என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications