தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: ரூ. 3 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்
சுரண்டை: சுரண்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே சண்முகாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு தாவிர கழிவுகளை எரித்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் இங்குள்ள தாவர மரக்கழிவுகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. எனினும் தீ கொளுந்து வி்ட்டு எரிகிறது. விடிய விடியப் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
மரக்கழிவு முழுவதும் பரந்து கிடப்பதால் பனை மர உயரத்திற்கு தீ பற்றி எரிகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு தீ மேலும் பரவாமல் இருக்க மரக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தீயணைப்பு கோட்ட அலுவலர் பத்மகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.3 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications