ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில் பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியுடன் மட்டுமே இதுகுறித்துப் பேச முடியும். நாங்கள் பேச்சுவார்த்தையை மறுக்கவில்லை.
அதேசமயம், கபில் சிபல் அல்லது ப.சிதம்பரம் அல்லது வேறு யாருடனும் பேச நாங்கள் விரும்பவில்லை. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானுடன் பேசவும் நாங்கள் தயார் என்றார்.
பிரதிநிதிகளை அனுப்ப பிரதமருக்கு பேடி கோரிக்கை
இதற்கிடையே, கிரண் பேடி தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது...
நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக ஆக்கப்பூர்வமாக பேச நாங்கள் தயார். பிரதமர் தனது பிரதிநிதிகளை எங்களிடம் அனுப்பலாம்.
மத்திய அரசுடன் நாங்கள் மறைமுகமாக பேசி வருவதாக கூறப்படுவது தவறு. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் பேடி.












Click it and Unblock the Notifications