அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் திடீர் ஆதரவு
டெல்லி: அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் பிரியா தத் மற்றும் சஞ்சய் நிருபம் ஆகிய இருவர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் பிரியா தத், அன்னா ஹஸாரேவின் கோரிக்கைகளை தானும் ஏற்பதாக தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.பிக்கள், அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துமாறு அன்னா ஹஸாரே அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று நேற்று எம்.பிக்கள், அமைச்சர்கள் வீடுகளை பல இடங்களில் அன்னா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்.
மும்பை பந்த்ராவில் உள்ள பிரியா தத்தின் வீட்டுக்கும் 50க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களிடையே பிரியா தத் பேசினார். அப்போது அவர் கூறுகையில் எல்லோரையும் போலவே நானும் வலுவான லோக்பால் மசோதாவை விரும்புகிறேன். நீதித்துறையும் அதில் சேர்க்கப்பட வேண்டும். பிரதமர் பதவியும் சேர்க்கப்பட வேண்டும். பிரதமருக்கே இதில் ஆட்சேபனை இல்லை என்று நான் கருதுகிறேன் என்றார். இதைக் கேட்டதும் கூடியிருந்தவர்களுக்கு வியப்பாகி விட்டது. பிரியாவின் பேச்சை கை தட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து பேசிய பிரியா தத், இருப்பினும் அரசு கொடுத்த வரைவு மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே குழுவினர் கொடுத்துள்ள வரைவு மசோதாவும் சரி இரண்டுமே முழுமையானதாக இல்லை. பேச்சுவார்த்தை மூலம் முழுமையான, விசாலமான மசோதாவை இருதரப்பும் உருவாக்க முயல வேண்டும்.
ஊழலற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் கோரிக்கையை நானும் முழுமனதாக ஆதரிக்கிறேன், ஏற்கிறேன் என்றார் பிரியா.
இதேபோல விலே பார்லே பகுதியில் உள்ள சஞ்சய் நிருபம் வீட்டுக்கு அன்னா ஆதரவாளர்கள் சென்றபோது அவர் அன்னா தொப்பி அணிந்தபடி அவர்களைச் சந்தித்தார். அவர்களிடையே நிருபம் பேசுகையில், அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். அவரது போராட்டம் நல்ல நோக்கத்தின் அடிப்படையிலானது. இருப்பினும் நான் ஒருவனால் எதையும் சாதிக்க முடியாது என்றார்.
இதேபோல பல்வேறு எம்.பிக்களும் ஹஸாரேவின் போராட்ட நோக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications