ஜன் லோக்பால் மசோதாவில் பல குறைகள்; நிறைவேற்றுவது கஷ்டம்: அத்வானி

முன்னதாக நேற்று அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவை முழுமையாக ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயத்தில் பாஜகவின் மெளனம் குறித்து நேற்று மாலை ஹசாரே கேள்வி எழுப்பினார். மேலும் தங்களது கட்சி இந்த விவகாரத்தில் அமைதி காப்பதாக அக் கட்சியின் மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். எம்பி பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் பாஜக தலைமையை மிரட்டினர்.
இந் நிலையில் அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால், பிரசாந்த் பூஷண் ஆகியோர் பாஜக மூத்த தலைவர் அத்வானி நேற்றிரவு தனது இல்லத்துக்கு வரவழைத்துப் பேசினார். அப்போது கட்சித் தலைவர்களான நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோரும் உடனிருந்தனர்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கெஜரிவால், ஜன் லோக்பாலை முழுமையாக ஆதரிப்பதாக பாஜக உறுதியளித்துள்ளது என்றார்.
அருண் ஜெட்லி கூறுகையில், எங்களது ஆதரவை அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம். ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் பாஜக மிகத் தெளிவாகவே உள்ளது என்றார்.
நிதின் கட்காரி கூறுகையில், நாங்கள் சொன்ன சில கருத்துக்களையும் அன்னா குழு ஏற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் அன்னா குழுவுக்கு ஆதரவாக உள்ளோம் என்றார்.
பாஜக அடித்த பல்டி:
இந் நிலையில் இன்று ஐஐடி மாணவர்களை சந்தித்த அத்வானி, ஜன் லோக்பால் மசோதா விதிமுறைகளில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இதை ஹசாரே குழுவிடம் நேற்று விளக்க முயன்றேன்.
அந்த மசோதாவை அந்த வடிவிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது கஷ்டம். அதனால், அரசு கொண்டு வரும் லோக்பால் மசோதாவையே போதிய அளவில் திருத்தங்கள் செய்து நிறைவேற்றலாம். அதே நேரத்தில் அதை ஜன் லோக்பால் என்றே அழைக்கலாம்.
இதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் கூறியுள்ளேன் என்றார் அத்வானி.
முன்னதாக அக் கட்சியின் ராஜ்யசபா துணைத் தலைவர் அலுவாலியா கூறுகையில், ஜன் லோக்பால் மசோதாவை வரும் 30ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே கால நிர்ணயம் செய்து எச்சரிக்கை விடுத்திருப்பது ஏற்புடையது அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு பாஜக ஆதரவு அளிக்காது என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications