'ஆட்டோ' சங்கருக்குப் பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்குத் தண்டனை

Subscribe to Oneindia Tamil

Hanging Rope
சென்னை: 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்திற்கு தூக்குத் தண்டனை திரும்பி வந்துள்ளது. தமிழகத்தில் கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் ஆட்டோ சங்கர்.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடப்படுவர் என்று வேலூர் சிறை நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பும், பதட்டமும் பற்றிக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது 1995ம் ஆண்டுதான். அந்த ஆண்டு, ஏப்ரல் 27ம் தேதி ஆட்டோ சங்கர் சேலம் சிறையில் தூக்கிலிடப்பட்டார். தொடர் கொலைகளில் ஈடுபட்டு கைதான சங்கருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் வைத்து தூக்கிலிடப்பட்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004ம் ஆண்டு கொல்கத்தாவில். அந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அலிப்பூர் மத்திய சிறையில் தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் தூக்கிலிடப்பட்டார். 14 வயது சிறுமியை மிகக் கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்ததற்காக அவருக்கு இந்தத் தண்டன நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு மீண்டும் தூக்குத் தண்டனை திரும்பி வந்துள்ளது. தூக்கில் போடும் தேதியை சிறை நிர்வாகம் முடிவு செய்து விட்டதைத் தொடர்நது தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளும் அமைதியான முறையில் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

தூக்குமரத்தை தயார் செய்வது, தூக்கில் போடுவதற்கான நபரை தேடுவது, கயிறு உள்ளிட்டவற்றை வாங்குவது உள்ளிட்ட பணிகள் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. தூக்கு மரத்தை எண்ணெய் போட்டு தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறதாம்.

வேலூர் சிறையைப் பொறுத்தவரை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் எப்போதோ தயார் நிலையில் வைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

வேலூர் சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிலர் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரான முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோர் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தூக்குத் தண்டனை, அதுவும் ஒரே நேரத்தில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+