குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாக முடியல! இங்கிலாந்து பெண் ஏக்கம்
லண்டன்: இங்கிலாந்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் குழந்தைகளின் ஆடைகளை அணிகிறார். குதிரை மாதிரி சாப்பிட்டாலும் குண்டாகவே முடியவில்லை என்கிறார் வருத்தமாக.
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர், ஓல்டாமைச் சேர்ந்தவர் கரோல் பிரென்ச்(50). அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவரே குழந்தைகளின் ஆடைகளை அணிகிறார். பார்த்தால் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர் என்றே கூற முடியாது அந்த அளவுக்கு ஒல்லிக் குச்சியாய் இருக்கிறார். அதற்கு காரணம் டயட்டோ, உடற்பயிற்சியோ இல்லை. அவருக்கு மஸ்குலார் பைப்ரோசிடிஸ் டிஸ்ப்ரபோர்ஷன் என்னும் ஒரு வகையான தசை சம்பந்தப்பட்ட நோய் உள்ளது.
அந்த நோய் உள்ளவர்கள் என்ன தான் முக்கி, முக்கி சாப்பிட்டாலும் சதையே வைக்காது. பார்ப்பதற்கு எலும்பும், தோளுமாய் தான் இருப்பார்கள்.
இது குறித்து கரோல் கூறியதாக டெய்லி மெயில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது,
நான் இளம் வயதில் இருக்கையில் எல்லோரும் நான் வேண்டும் என்றே உடம்பை ஒல்லியாக வைத்திருக்கிறேன் என்று நினைத்தனர். நான் குதிரை மாதிரி சாப்பிடுவேன். ஒரு நேர உணவைக் கூட விடமாட்டேன். வாரத்தில் ஒரு தடவை சைனீஸ் உணவு சாப்பிடுவேன். ஆனாலும் குண்டாக முடியவில்லை. நான் என்ன வேண்டும் என்றேவா இப்படி இருக்கிறேன்.
என்னைப் பார்ப்பவர்கள் ஏதோ பார்க்காத ஒன்றைப் பார்த்தது போன்று என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பலர் உடம்பைக் குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டிருக்க கரோலா குண்டாக மாட்டோமா என்ற ஏக்கத்திலேயே வாழ்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications