சேலத்தில் போலீசாரை மிரட்டிய தே.மு.தி.க. பிரமுகர் கைது
சேலம்: சேலத்தில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை மிரட்டிய தே.மு.தி.க. கிச்சிப்பாளையம் அவைத் தலைவர் புல்லட் மனோகரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே ரெட்டியூர் பகுதியில் கேபிள் கட்டணம் தொடர்பாக இருதரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.ஐ ராஜதுரை என்பவர் மணிவேல், மூர்த்தி ஆகிய இருவரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
இதையறிந்த தே.மு.தி.க., சேலம் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தே.மு.தி.க., கிச்சிப்பாளையம் அவைத் தலைவர் புல்லட் மனோகர் ஆகியோர் தலைமையிலான 30 பேர், காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தே.மு.தி.க., கிச்சிப்பாளையம் அவைத் தலைவர் புல்லட் மனோகரை போலீசார் கைது செய்தனர். மேலும், காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த தே.மு.தி.க.,வைச் சேர்ந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை தே.மு.தி.கவினர் மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications