அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச லேப்-டாப்
சென்னை: இந்த நிதியாண்டில் (2011-2012) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் கலை அறிவியல், கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கம்ப்யூட்டர் பயிற்சித் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 9.12 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்கப்பட உள்ளது. லேப்-டாப் கொள்முதல் செய்யும் பணியை அரசு நிறுவனமான எல்காட் நிறுவனம் மேற்கொள்ளும். மாணவர்களுக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கும் முறை விவரம் வருமாறு:
நடப்பு நிதியாண்டில் (2011-2012) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், கலை அறிவியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
வரும் நிதியாண்டில் (2012-2013) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் கலை அறிவியல் கல்லூரிகளில் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் லேப்-டாப் கிடைக்கும்.
2013-2014ம் ஆண்டு முதல் அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், முதல் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும். இந்த திட்டம் ரூ.912 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications