அக்னி-2 ஏவுகணை இன்று வீலர் தீவில் சோதிக்கப்படுகிறது
பலசூர்: இந்தியாவின் அக்னி-2 ஏவுகணை இன்று சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உள்ள வீலர்ஸ் தீவில் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்னி-2 ஏவுகனையின் முதல் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் 2001, 2004 என அடுத்தடுத்து அக்னி-2 ஏவுகனை சோதனைகள் நடத்தப்பட்டது.
அக்னி-2 ஏவுகனை 20 மீட்டர் நீளம் கொண்டது. 16 ஆயிரம் கிலோ எடையுடன் 2 ஆயிரம் முதல் 3,500 கி.மீ., கடந்து சென்று இலக்கை தாக்கும் தன்மைக் கொண்டது. இதில் அணுஆயுதங்களை எடுத்து சென்று இலக்கை தாக்க வல்லது.
அக்னி-2 ஏவுகணையின் அடுத்தக்கட்ட சோதனை இன்று நடத்தப்பட போவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்த 70 கி.மீ., தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து, இந்த ஏவுகணை சோதிக்கப்படும். இந்த ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
