வரதட்சனை கொடுமை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உள்பட 17 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: வரதட்சனை கொடுமை சட்ட பிரிவின் கீழ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உள்ளிட்ட 17 பேர் மீது கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி ஆர்.எஸ்.லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கலையரசிக்கும், தர்மபுரி மாவட்டம் ஆரதஅள்ளி கிராமத்தை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சசி (எ) ரமேஷ்குமாருக்கும் கடந்தாண்டு ஜூன் 26ம் தேதி திருமணம் நடந்தது.
இவர்கள் திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 50 பவுன் நகையும், 5 லட்சம் ரூபாய் பணமும் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், திருமணம் நடந்த 4 மாதத்துக்கு பிறகு மேலும் வரதட்சணை வாங்கி வர கலையரசியை, சசி வற்புறுத்தினாராம்.
மேலும், கலையரசியை மாமியார் பார்வதி (62) மற்றும் அவர்களது உறவினர்கள் சுரேஷ் (45), ஜெயமணி (30), சரசம்மா (57), வினோபாஜி (57), திலகவதி, லோகநாதன், வெங்கடேசன், சந்தோஷ் (30), அருணாதேவி, தர்மன் (27), ராஜன் (57), சாந்தி (45), சரஸ்வதி (29), முனியம்மாள் (50), தீபா (25) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் ஆபாச வார்த்தையால் திட்டி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், தான் கர்ப்பமாக இருந்த போது, தனது வயிற்றின் மீது உதைத்ததில் கரு கலைந்து விட்டதாகவும், இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என அவர்கள் மிரட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் கலையரசியின் கணவரான சசி (எ) ரமேஷ்குமார் உள்ளிட்ட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications