ஒபாமா தேர்தல் செலவுக்கு நிதி திரட்டுவதில் இந்தியர்கள் முதலிடம்!
Subscribe to Oneindia Tamil

இதுவரை அதிபர் ஒபாமாவின் தேர்தல் செலவுக்காக 86 மில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டுள்ளன. இதில் 35 மில்லியன் டாலர்கள் 244 பேரிடமிருந்து வந்துள்ளது. இவர்களில் முதலிடத்தில் இருப்பது 4 இந்திய-அமெரிக்கர்கள் ஆவர்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த அஸிதா ராஜி, ஷிபாலி ராஸ்தான் துக்கல், கவிதா தன்கா, நியூயார்க்கைச் சேர்ந்த தேவன் பரேக் ஆகிய 4 இந்தியர்களும் தலா 1 மில்லியன் டாலர்கள் வரை திரட்டித் தந்துள்ளனர்.
இதில் ராஜி அமெரிக்காவின் தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினராவார். தேவன் பரேக் நியூயார்க்கில் இன்சைட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்கா, கலிபோர்னியாவின் பிரபலமான வழக்கறிஞர் ஆவார்.












Click it and Unblock the Notifications